சுட்டெரிக்கும் வெயிலில் சிறுமியின் கை, கால்களை கட்டி மாடியில் கிடத்திய சம்பவம்... - பதற வைக்கும் வீடியோ வைரல்
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதிர்ச்சி வீடியோ வைரல்
அந்த வீடியோவில், சுட்டெரிக்கும் மதிய வேளையில் சிறுமியின் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் கிடத்தியுள்ளனர். அந்தக் குழந்தை சூடு தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட்டு கதறி அழுகிறது.
இதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் குழந்தையை இப்படி துன்புறுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.