மேடையில் இளைஞர் நடனம்...மேலே விழுந்த திரை - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!

Viral Video China Hong Kong
By Sumathi Jul 30, 2022 08:10 AM GMT
Report

நடன நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த பிரபல நடனக்குழுவை சேர்ந்த இளைஞர் மீது திரை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 நடன  நிகழ்ச்சி

சீனாவில் மிகவும் பிரபலமான கேண்டபாப் மிரர் என்கிற நடனக்குழுவினர், ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். இவர்களுக்கென சீனாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேடையில் இளைஞர் நடனம்...மேலே விழுந்த திரை - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ! | Shocking Video Of Screen Fell Performing Dancer

அந்த நிகழ்ச்சியை பார்க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வீடியோ ஸ்கிரீன் அறுந்து விழுந்தது.

பதைபதைக்கும் வீடியோ 

இதில் நடனமாடிக் கொண்டிருந்த இருவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கும் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது விழுந்த பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த விபத்தின் காரணமாக கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் அடுத்ததாக கலந்துகொள்ள இருந்த 12 நடன நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் அறுந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.