அப்பா என்னை விட்டு போகாதீங்க…கைபிடித்துக் கொண்டு உயிரிழந்த சிறுமி - கலங்க வைக்கும் புகைப்படம்
துருக்கியில் நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த புகைப்படம் ஒன்று மனத்தை ரணமாக்குகிறது.
பயங்கர நிலநடுக்கம்
துருக்கியில் நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த புகைப்படம் ஒன்று மனத்தை ரணமாக்குகிறது.
காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. காசியாடெப் என்ற நகரம் துருக்கின் தென் கிழக்கிலும், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியா நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர்.
7 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு
இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வெளியான தகவலின் படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நிலநடுக்கதால் ஏற்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து கொத்து கொத்தாக சடலங்கள் மீட்கப்படுகின்றன. ஒரு சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மீட்பு பணிகளில் 24,400 பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் 6000 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்துள்ளதால் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹடாய் மாகாணத்தில் இடிபாடுகளில் சிக்கிய குடும்பத்தினரின் கூக்குரல் கேட்ட போதிலும் கனரக மீட்பு உபகரணங்கள் இல்லாததால் அவர்களை மீட்க முடியாமல் மக்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிய உயிருடன் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
மனதை ரணமாக்கும் புகைப்படம்
இடிபாடுகளில் சிக்கிய உயிருடன் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இடிபாடுகளில் சிக்கிய உயிருடன் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 15 வயது சிறுமி, வெளியே அமர்ந்திருக்கும் தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி காண்போர் கண்ணகளில் கண்ணீரை வரவழைக்கின்றது. இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவு என உயிர்தப்பிய மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.