மகளிடம் தவறாக நடந்த கணவன் - சுத்தியால் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்த மனைவி - அதிர்ச்சி சம்பவம்

shocking news murder husband wife arrest
By Nandhini Jan 28, 2022 11:43 AM GMT
Report

குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஓட்டேரி, வாழைமா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). இவருடைய மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு ஸ்ரீகீர்த்தி (20), கௌதம் (10) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார்.

இதே போல், நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா தனது கணவரிடமிருந்து மகளை மீட்க போராடி இருக்கிறார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். சுத்தியால் தலையில் அடிபட்ட பிரதீப் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிரீத்தி இது குறித்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, அவர்கள் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரதீப் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவி பிரீத்தாவை கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மகள், மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடத்தி வருகின்றனர்.