கொரோனாவில் இருந்து மீளும் ஆண்களுக்கு அடுத்த அதிர்ச்சி
கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும் என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தாக்கியவர்களை அதில் இருந்து மீட்பதற்காக மருத்துவர்கள் உட்பட அனைவரும் போராடினாலும் அது உடலின் பல உறுப்புகளை பாதித்து விடுகிறது.
அதனால் கொரோனாவில் இருந்து மீண்டாலும் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதே பெரும் சவாலாக மாறிவிட்டது.
எனவே தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள சில தரவுகள் கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.