தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர்

Police spokesman India Crime
By Vinoja Jul 11, 2026 02:24 PM GMT
Report

காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த சம்பவம் நாட்டையே பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரங்காரெட்டி மாவட்டம் ராய்வலகூடா பகுதியைச் சேர்ந்த 28 வயது ராஜ்குமார், சிறுமியை ஒருதலையாக காதலித்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர் | Shocking Crime In Telangana Six Killed

புகார் கொடுத்ததால் ஆத்திரம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சிறுமியின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், இரவில் கத்தியுடன் சென்ற ராஜ்குமார், சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கொலை செய்து, சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார்.

காரில் கடத்தப்பட்ட சிறுமியை, வழியிலிருந்த ஒரு விவசாய நிலத்திற்கு இழுத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவளால்தானே நாம் ஜெயிலுக்குப் போனோம் என்ற ஆத்திரத்தில், அங்கேயே கத்தியால் குத்தி கொன்று, அருகிலிருந்த ஏரிக்கரையில் சடலத்தை வீசி எறிந்துள்ளார்.

தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர் | Shocking Crime In Telangana Six Killed

அத்துடன் நிறுத்தாமல், அதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்ற அவர், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்துக்குப் பிறகு தனது தந்தைக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.