மகனுக்காக மேடையில் பாடிய ஷோபா - வைரலாகும் விஜய்யின் ரியாக்சன்
மகன் விஜய்க்காக அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் மேடையில் சூப்பர் ஹிட் பாடலை பாடியுள்ளார்.
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அஜித்தின் 3 படங்களை இயக்கிய எச்.வினோத் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வைரல் வீடியோ
இந்நிலையில் ஜனநாயகன் படத்துடைய இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நடைபெற்றது.
Shoba Amma Singing “Kodambakkam Area” 😍#JanaNayaganAudioLanuch pic.twitter.com/YDp2VAjIDZ
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) December 27, 2025
80,000 பேர் அமரக்கூடிய அந்த பிரம்மாண்ட மைதானத்தில், 75,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இதில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மேடையில் சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலை பாடினார்.
இதனை விஜய் கீழே அமர்ந்தவாறு ரசித்துக் கேட்டு ரியாக்சன் செய்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.