சங்கீதாவுக்கு அதைத்தவிர வேற எதுவுமே தெரியாது.... - பட்டென போட்டுடைத்த விஜய்யின் அம்மா ஷோபா...!

Chandrasekhar Vijay Shoba
1 வாரம் முன்

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

சஷ்டியப்த பூர்த்தி விழா

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.சந்திரசேகருக்கும், தாய் ஷோபாவிற்கும் திருக்கடையூரில் 80வது சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது. தன்னுடைய 80வது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார்.

ஆனால், இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டிருந்தார்.

shoba-chandrasekhar-sangeeta

விஜய் அம்மா ஷோபா பேட்டி

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பற்றி ஷோபா சந்திரசேகர் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், நானும் சங்கீதாவும் மாமியார், மருமகள்னு சொல்றதைவிட நல்ல ஃப்ரெண்ட்ஸ்-னு தான் சொல்ல வேண்டும். சங்கீதா வீட்டையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொள்வார்.

சங்கீதாவைப் போல் வேற யாரையும் அப்படியெல்லாம் பார்க்க முடியாது. வீடு, குழந்தைகள் இதைத்தாண்டி அவருக்கு எதுவுமே தெரியாது. எனக்கு நல்ல மருமகள் கிடைத்தாள். என்னுடைய பேரனுக்கும், பேத்திக்கும் என் மீது ரொம்ப பாசம் வைத்துள்ளனர்.

இரண்டு பேருமே ரொம்ப அமைதியானவங்க. அவர்கள் பேசும்போதுகூட அமைதியா தான் பேசிப்பாங்க. அதைப் பார்க்கும் போது எனக்கு சுவாரஸ்யமா இருக்கும் என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.