என்னையும், விஜய்யையும் அப்படித்தான் நினைப்பார்; அவருக்குத்தான் முதலிடம் - ஷோபா சந்திரசேகர் ஓபன்டாக்
ஷோபா சந்திரசேகர் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஷோபா சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது, தனது தந்தை சந்திரசேகருடன் சண்டை, சச்சரவு என சர்ச்சையில் சிக்குவார்.

அவரது தாய் ஷோபா சந்திரசேகர் பன்முகத் திறன் கொண்டவர். அவரது இயக்கத்தில் உருவான நண்பர்கள் திரைப்படம் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்றது.
வெற்றிக்கு காரணம்?
இந்நிலையில், இயக்கத்தில் தனது வெற்றியை குறித்து பேசியுள்ள ஷோபா தனது வெற்றிக்கு காரணம் கணவர்தான். பாடகியாக வலம் வரவேண்டும் என்பதே தனது ஆசை, ஆனால் தனக்கு இவ்வளவு பெரிய அடையாளத்தை கொடுத்தது கணவர்தான். சந்திரசேகர் எப்போதுமே தன்னையும் தனது மகன் விஜய்யையும் பிரபலமாக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்.

தனது பெயர் வர வேண்டும் என்று நினைக்கமாட்டார் அதுதான் அவரது இயல்பு. சிறு வயதிலிருந்தே சந்திரசேகருக்கு விஜய் மீது அதீத பிரியம். விஜய்யை தவிர சந்திரசேகருக்கு எதுவுமே தெரியாது.
இப்போதும் சந்திரசேகருக்கு குறிப்பிட்ட நண்பர்கள் கிடையாது. விஜய்க்கு பிறகுதான் மனைவி ஷோபா என சந்திரசேகரே பலமுறை கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil