மறுமணம் செய்த சோயிப் மாலிக் - சானியா மிர்ஸாவுடனான பிரிவுக்கு காரணம் இதுதானா?
சானியா மிர்ஸா-சோயிப் மாலிக் ஜோடி ஏன் பிரிந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரிவு
இந்திய டென்னிஸ் வீராங்கனை மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டது. அதனை உண்மையாக்கும் வகையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி சோயிப் மாலிக், நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் சானியா மிர்ஸா-சோயிப் மாலிக் ஜோடி ஏன் பிரிந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்?
இந்த விவாகரத்திற்கான முக்கிய காரணமே சோயிப் மாலிக் தானாம். கடந்த 3 ஆண்டுகளாக நடிகை சனா ஜாவத்துக்கும் சோயிப்புக்கும் தொடர்பு இருந்ததாம்.

இதை தெரிந்துகொண்ட சானியா மிர்சா சோயிப் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சோயிப் குடும்பத்தினர் இருவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் சோயிப் மாலிக் சனாவுடனான உறவைத் துண்டிக்காமல் இருந்தது சானியா மிர்சாவுக்கு மன உளைச்சலைத் தந்ததாம்.
இதனால் அவர் சோயிப்பை விட்டு விலகியிருக்கிறார். ஒருகட்டத்தில் விவாகரத்து பெறுவதே நல்லது என நினைத்த சானியா 'குலா' முறைப்படி , சோயிப்பை விவாகரத்து செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் தவெக முன்னிலை IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil