“யாரை கேட்டு வார்னருக்கு விருது கொடுத்தீங்க?” - டென்ஷனில் அக்தர் சொன்ன கருத்து

davidwarner AUSvNZ shoaibakhthar
By Petchi Avudaiappan Nov 15, 2021 06:45 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய டி20  உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக கோப்பையை வென்றது.

இதையடுத்து போட்டிகளில் அதிக அழுத்தத்தை கடந்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர்நாயகன் விருது நியாயமற்றது என கூறியுள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தொடரின் நாயகனாக பாபர் அசாம் வருவதைக் காண மிகவும் ஆவலுடன் இருந்தேன். நிச்சயமாக இது நியாயமற்ற முடிவு என கூறியுள்ளார். 

ந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னர் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.