அக்தருக்கும், அஃப்ரீடிக்கும் இடையே உள்ள பிரச்சனை - ஆதாரத்துடன் வெளியான உண்மை
தனக்கும், அஃப்ரீடிக்கும் இடையிலான உறவு பற்றி ஜாலியாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர மனம் திறந்து பேசியுள்ளார்.
ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஷோயப் அக்தர் 35 விநாடிகளே ஓடும் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஷாகித் அப்ரீடியுடன் காணப்படும் அவர், ‘எனக்கு அப்ரீடியிடம் பிடிக்காத விஷயம்’ என்ற பெயரில் அதுகுறித்து பேசியுள்ளார்.
எனக்கும் அஃப்ரீடிக்கும் உள்ள பிரச்சனை இதுதான். அவர் என்னை விட பார்க்க அழகாக இருக்கிறார். இன்னொரு பிரச்சனை நான் அடிப்பதை விட பந்துகளை நீண்ட தொலைவு அடிக்கிறார். மிகவும் அடிப்படையாக அவரிடம் எனக்குப் பிடிக்காதது என்னை விட அவர் பிரபலமாக உள்ளதே ஆகும்.
இதையெல்லாம் விட மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் அவரது தலை முடி, என்னை விட அவருக்கு அதிகமிருக்கிறது. டார்லிங் ஆஃப் த கிரவுட் என்பார்களே அது போல் ஷாகித் அப்ரீடி ரசிக ரசிகைகளுக்கு அதிகம் பிடித்தவர் என்று கூறியுள்ளார் ஷோயப் அக்தர்.
2021 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அப்ரீடியைக் கண்டவுடன் அவரிடம் ஓடிப்போய் போட்டோ எடுத்துக் கொண்டு அதை ட்விட்டரில் பகிர்ந்தார்.
பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் ஆடி கோப்பயை வெல்லும் என்று அக்தர், அப்ரீடி இருவருமே நினைத்தனர். ஆனால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் பரிதாபத் தோல்வி அடைந்தது..