இதைதான் கர்மா என்று சொல்வார்கள்... - அக்தர் ட்வீட்டுக்கு ஷமி பதிலடி...!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.
2-வது முறையாக சாம்பியன் பட்டம்
வென்ற இங்கிலாந்து நேற்று மெல்போர்னில் T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அக்தர் கருத்து
சமீபத்தில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசுகையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஆட்டம் உண்மையிலேயே ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியே வந்துவிடும்.
அதே சமயம் அடுத்த வாரம் அரை இறுதியில் விளையாடிய பின் இந்தியாவும் தோல்வி அடைந்து நாடு திரும்பி விடும். ஏனெனில் இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது என்று தெரிவித்தார்.
ரசிகர்கள் கண்டனம் அக்தரின் இந்த பேச்சுக்கு இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கமெண்ட் செய்து வந்தனர்.
அக்தருக்கு ஷமி பதிலடி
இந்நிலையில், அக்தர் பாகிஸ்தான் தோல்வி குறித்து உடைந்த இதயத்தின் எமோஜியை டுவிட்டரில் பகிர்ந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஷமி, ‘மன்னிக்கவும் சகோதரா.... இதை கர்மா என்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இவரின் டுவிட்டுக்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma ??? https://t.co/DpaIliRYkd