சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
3 போக்சோ வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 17 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியாா் பள்ளியை நடத்தி வந்த சாமியாா் சிவசங்கா் பாபா, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாா்களின் அடிப்படையில்,, கடந்த ஜூன் 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்நிலையில், அந்தப் பள்ளியில் படித்த கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோந்த முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி அதிகாரிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், சிவசங்கா் பாபாவை விரைவில் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.
இந்த நிலையில் 3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 17 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவின் காவலை நீதிபதி நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.