திருநங்கைனு என்னை எல்லாரும் ஒதுக்குனாங்க... - பிக்பாஸில் கண்கலங்கிய ஷிவின்...! - வைரலாகும் ப்ரொமோ

Bigg Boss
By Nandhini Oct 19, 2022 08:12 AM GMT
Report

திருநங்கைனு என்னை எல்லாரும் ஒதுக்குனாங்க என்று பிக்பாஸில் ஷிவின் சொன்ன கதையை கேட்டு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கண் கலங்கினர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

திருநங்கையின் என்னை ஒதுக்குனாங்க...

இந்நிலையில், இன்றைக்கான பிக்பாஸ் சீசன் 6 ப்ரொமோ வெளியாகியுள்ளது.

அந்த ப்ரொமோவில், திருநங்கை போட்டியாளரான ஷிவின், தன் வாழ்க்கைக் கதையை கூறுகிறார்.

எனக்கு வேலையே கிடைக்காது. எங்கையாவது பிச்சை எடுத்திருவேனோ என்ற பயத்தில், என் பெற்றோர் என்னை சிங்கப்பூர் அனுப்பி வைத்தாங்க. அதன்பின் நான் என் அம்மாவிடம் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

பாசம் இல்லாமல், படிப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் திருநங்கைகளின் நிலைமை மாறணும். என்னை மாதிரி இருப்பவர்களின் கதைகளும் இந்த சமூகத்தில் கேட்கப்படனும்னு என்று நினைத்துதான் நான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்தேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார். இதைக் கேட்ட பிக்பாஸ் ஹவுட்மேட்ஸ் அனைவரும் கண்கலங்குகின்றனர்.

தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷிவினுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய ஆதரவான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.   

shivin-bigboss-season-6