மிரட்டும் சிவராஜ்குமாரின் GHOST படத்தின் பர்ஸ்ட் லுக்
கன்னட திரையுலகின் மாஸ் ஹீரோவான சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
வெளியானது GHOST போஸ்டர்
கன்னட மாஸ் ஹீரோ மற்றும் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்போது ஆக்ஷன் த்ரில்லர் படமான 'GHOST' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

பிற மொழிகளில் இருக்கும் டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். பிளாக்பஸ்டர் 'Birbal' புகழ் ஸ்ரீனி இந்தப் படத்தை இயக்குகிறார், அரசியல்வாதியும் தயாரிப்பாளருமான சந்தேஷ் நாகராஜின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது .
சிவராஜ்குமாரின் மாஸ் லுக்
கன்னட சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹெய்ஸ்ட் படம் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் க்ளைமாக்ஸை கேட்டு உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.
இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. GHOST படம் அனைத்து வித ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் துப்பாக்கியை பிடித்திருக்கும் சிவராஜ்குமாரின் மாஸ் லுக் அனைவரையும் ஈர்க்கிறது
அதோடு காருடன் கலந்த ரிவால்வர் படத்தின் வகையைப் பற்றிய தெளிவான குறிக்கிறது. சர்ச்லைட், பைக்கர்ஸ், கார்கள் போஸ்டர் முழுக்க குறியீடுகளும் அதிகமாக உள்ளது.
த்ரில்லர் படம்
'GHOST' படக்குழுவில் தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த படத்திற்கு மஸ்தி மற்றும் பிரசன்னா விஎம் இருவரும் வசனம் எழுதுகிறார்கள்.

தகரு மற்றும் சலகா போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு மஸ்தி வசனம் எழுதியுள்ளார். அதேசமயம் பிரசன்னா ஸ்ரீனியின் 'பீர்பால்' படத்திற்கு வசனம் எழுதினார், இது கன்னடத் திரைப்படங்களில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற த்ரில்லர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும் சமீபத்திய குடும்ப பொழுதுபோக்கு படமான 'ஓல்ட் மாங்க்'.பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கவுள்ளது.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil