காவிரி எங்கள் சொத்து.! போராட்டத்தில் சிவராஜ்குமார்..! அதிர்ந்த ரசிகர்கள்
காவிரி நதிநீர் பிரச்சனையில் இன்று கர்நாடகாவில் நடைபெற்று வரும் பந்த்தில் நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டது தமிழக ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
சிவராஜ்குமார்
ரஜினி நடிப்பில் வெளியான "ஜெயிலர்" படத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், நடிகர் சிவராஜ்குமாரின் காட்சிகள் தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர, அவருக்கு இங்கும் ரசிகர்கள் பெருமளவில் அதிகரித்தனர்.
கர்நாடகாவில் சூப்பர்ஸ்டாராக இருந்த போதிலும், தமிழகத்தில் அது வரை பெரிய அறிமுகமில்லாமல் இருந்த சிவராஜ்குமார் ஒரே நாளில் மிக பெரிய நட்சத்திரமாக மாறினார். தற்போது அவர் தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகின்றார்.
அதிர்ந்த ரசிகர்கள்
இந்நிலையில் தான் இன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் பந்த்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது தமிழக ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பந்த் கூட்டத்தில் பங்கேற்ற அவர், காவிரி எங்கள் உரிமை என கூறியது மட்டுமின்றி, காவிரி கர்நாடகத்தின் சொத்து என்றும் பேசினார்.
இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி அவர் மீது ஒருதரப்பு ரசிகர்கள் விமர்சனத்தை வைத்து வரும் சூழலில், மற்றொரு கருத்தும் பரவலாகி வருகின்றது. கர்நாடகத்தில் அதிகளவில் இருக்கும் இந்த எழுச்சி தமிழக திரை துறையினரிடம் மட்டும் ஏன் இல்லை என வினவி வருகின்றனர்.