உடம்பை வில்லாக வளைத்து யோக செய்த ஷிவானி - வைரலாகும் புகைப்படம்!
ஷிவானி நாராயணன் யோகா செய்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 2.9m ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருக்கிறார்கள். இதில் இவர் 325 போஸ்ட் போட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் போஸ்ட்க்கும் லைக்குகளும், கமெண்டுகளும் தினம் தினம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஷிவானி தலைகீழாக தொங்கி யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஷிவானியின் போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. போட்டோ அப்லோட் செய்து ஒரு மணிநேரத்திற்குள் ஆயிரத்தை தாண்டி கமெண்ட்டுகளும், லட்சத்தை தாண்டி லைக்குகளும் தாண்டி சென்று விட்டது.