கர்நாடகாவில் பயங்கர வெடிவிபத்து : 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

india fire village
By Jon Jan 23, 2021 01:55 PM GMT
Report

கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் ஹூன்சூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு லாரியில் வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றபோது நேற்றிரவு திடீரென லாரி வெடித்து விபத்துக்ககுள்ளானது.

இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக சிவமோகா மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த சிமோகா மட்டுமின்றி, தாவணகரே, உத்தர கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் பயங்கர சத்தமும், நில அதிர்வும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் பயங்கர வெடிவிபத்து : 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்! | Shivamogga Crusher Hunasodu

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்.


வெடி விபத்தால் உயிர் இழந்தவர்களுக்கும் அவரது குடும்பங்களுக்குஆழ்ந்த இரங்கல் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.