மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

By Sumathi Jun 03, 2022 07:20 AM GMT
Report

கியான்வாபி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல. வரலாற்றை மாற்ற முடியாது.

இதெற்கெல்லாம் இப்போதைய முஸ்லிம்களோ, இந்துக்களோ காரணமில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.

மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | Shivalingam In Mosques Rss Leader Mohan Bhagwat

மஹாராஷ்டிரா , நாக்பூரில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் உரையாற்றிய மோகன் பகவத் தற்போது ஞானவாபி விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது , இந்த சர்ச்சையை பெரிதாக்கக் கூடாது என்றார்.

இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது என தெரிவித்தார்.

இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்களை அணுகும் போது , நீதித்துறையின் தீர்ப்பை ஏற்க வேண்டும் , கேள்விகளை எழுப்பக் கூடாது என்றும் நீதித்துறையை புனிதமாகவும் , உன்னதமாகவும் கருதி தீர்ப்புகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆர்எஸ்எஸ் எந்த விதமான வழிபாட்டையும் எதிர்க்கவில்லை என குறிப்பிட்ட மோகன் பகவத் , அனைத்தையும் புனிதமாக கருதுவதாகவும் மதம் மாறியவர்கள் அந்த வழிபாட்டை ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் நம் ரிஷிகள், முனிகளின் வம்சாவளியினர் எனவும் நாமும் அதே முன்னோர்களின் வம்சாவளியினர் என்றார்.

கியான்வாபி சர்ச்சை, கிருஷ்ண ஜென்ம பூமி சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகளும் பெரிதாகி வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.