முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரசுரங்களை கிழித்தெறிந்த சிங்களவர்கள்!
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படுகொலை நாளான இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படுகொலை நாளான மே18 முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் தற்போது இடம்பெற்று வருகின்றன.
முன்னதாக இலங்கையில் மக்களின் கடுமையான போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இதனையடுத்து மகிந்த ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகளை டார்கெட் செய்து பொதுமக்கள் தாக்க தொடங்கினர்.
அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறி 100-க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது. இதனையடுத்து மகிந்த ராஜபக்ச கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் அங்கு நிகழும் அடுத்தடுத்த அரசியல் மாற்றம், எதிர்காலத்தில் இதனால் ஏற்படும் சிக்கல் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஐபிசி தமிழ் சேனலுக்கு சிவாஜிலிங்கம் அளித்த நேர்காணலை காண்போம்.