தனது பக்தரை சிவராத்திரி அன்று சிவன் அழைத்துச் சென்று விட்டார் - நடிகர் ரஜினி உருக்கம்
தன் பக்தரை சிவராத்திரி அன்று சிவன் அழைத்துச் சென்று விட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மயில்சாமி உயிரிழப்பு
தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி, சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சிவராத்திரியையொட்டி சென்றுள்ளார்.
சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் உருக்கம்
இந்த நிலையில் இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது அது சிவனின் கணக்கு.
தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவபெருமான் அழைத்துச் சென்றதகா ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.
மேலும் பேசிய அவர், சிவன் கோவிலுக்கு சென்று நான் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.

இந்தியா இலவச தங்குமிடம் அல்ல: இலங்கை தமிழரின் கோரிக்கையை நிராகரித்த இந்திய உச்ச நீதிமன்றம் IBC Tamil
