சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி!

Shiva Shankar Baba
By Thahir Jul 24, 2021 09:42 AM GMT
Report

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி! | Shiva Shankar Baba

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிறைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிவசங்கர் பாபா, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.