எம்எல்ஏவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
மஹாராஷ்ட்ராவில் சிவசேனா எம்எல்ஏவின் மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் குர்லா பகுதியை அடுத்த நேரு நகரில் ஆளும் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ மங்கேஷ் குடால்கர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே மங்கேஷின் மனைவியான ரஜினி வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏவின் வீட்டு ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் நடந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பதால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் எம்எல்ஏ மங்கேஷ் குடால்கர் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஏதேனும் தற்கொலை குறிப்பு கடிதம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் திரளானோர் அவரது இல்லம் முன்பு திரண்டனர். தற்கொலை வழக்காகத் தெரிந்தாலும் கூட மகாராஷ்டிரா காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு எம்எல்ஏ மங்கேஷ் ஆன்லைனில் தன்னிடம் சிலர் ‘செக்ஸ்’ சாட் செய்து 5 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் புகார் தெரிவித்திருந்தார். அப்போது அவரது பெயர் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.