தக் லைஃப் படத்திற்கு தடை? - கமலுக்கு ஆதரவாக இறங்கிய கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்

Kamal Haasan Karnataka Shiva Rajkumar Thug Life
By Karthikraja May 29, 2025 11:52 AM GMT
Report

கன்னட மொழி சர்ச்சையில், கமலுக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல் கன்னட மொழி சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம், வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தக் லைஃப் படத்திற்கு தடை? - கமலுக்கு ஆதரவாக இறங்கிய கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் | Shiv Arajkumar Support Kamal In Kannada Issue

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்பேசிய கமல்ஹாசன், ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். 

தக் லைஃப் படத்திற்கு தடை? - கமலுக்கு ஆதரவாக இறங்கிய கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் | Shiv Arajkumar Support Kamal In Kannada Issue

அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தான் பிறந்தது. எனவே நீங்களும் எனது குடும்பத்தின் ஒரு அங்கம் தான்" என பேசியிருந்தார்.

மன்னிப்பு கேட்க மறுப்பு

தமிழில் இருந்து தான் கன்னட மொழி தோன்றியது என கமல் பேசியதற்கு, கர்நாடகாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள கன்னட அமைப்புகள், தக் லைஃப் படத்தின் பேனரை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. 

தக் லைஃப் படத்திற்கு தடை? - கமலுக்கு ஆதரவாக இறங்கிய கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் | Shiv Arajkumar Support Kamal In Kannada Issue

கமல் மன்னிப்பு கேட்கா விட்டால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை தடை செய்வோம் என கர்நாடகவின் கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த கமல், “எனக்கு மொழி வரலாற்று அறிஞர்கள் சொல்லிக் கொடுத்ததைதான் நான் கூறினேன். நான் உட்பட எந்த அரசியல்வாதிக்கும் மொழிப் பற்றிப் பேச போதுமான தகுதி கிடையாது. 

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன?

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன?

இதுபற்றிய விவாதத்தை வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுவோம். அன்பு எப்போதும் மன்னிப்புக் கேட்காது” என தெரிவித்துள்ளார்.

"கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகாது'' என்று கர்நாடகா திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கெடு விடுத்துள்ளார்.

சிவ ராஜ்குமார் ஆதரவு

இந்நிலையில், இந்த மொழி விவகாரத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் கமலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

தக் லைஃப் படத்திற்கு தடை? - கமலுக்கு ஆதரவாக இறங்கிய கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் | Shiv Arajkumar Support Kamal In Kannada Issue

இது தொடர்பாக பேசிய அவர், "கமல் சார் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. அவருக்கு தான் என்ன சொன்னோம் என்று நன்றாகவே தெரியும், உரிய பதிலையும் அவர் சொல்வார். 

கன்னடம் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். கன்னட திரைத்துறையிலேயே புதுமுகங்கள் வந்தால் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும்போது மட்டும் பேசுவது சரியில்லை.

நான் கன்னடத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன். கமலை கண்டிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்திருக்கிறீர்கள்?" என தெரிவித்துள்ளார்.