துபாய் தொழிலதிபருடன் திருமணம்..! பக்காவாக செட்டிலான சந்தானம் ஹீரோயின்..!
தமிழில் டிக்கிலோனா படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷெரின் காஞ்ச்வாலா.
ஷெரின் காஞ்ச்வாலா
ஏர் ஹோஸ்டரஸாக பணியாற்றி பிறகு, மாடலிங் துறையில் நுழைந்த ஷெரின் காஞ்ச்வாலா, கடந்த 018ல் கன்னடத்தில் வெளியான தீரஜ் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து தமிழில், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் சிவா கார்த்திகேயன் தயாரித்த ரியோ ராஜ் ஹீரோவாக நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நிச்சயம்
அதனை தொடர்ந்து சந்தானத்துடன் டிக்கிலோனா, சிபி சிபி ராஜுடன் வால்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்து வரும் இவருக்கு கடந்த 5-ஆம் தேதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

துபாயை சேர்ந்த வாசனைப் பொருட்கள் (perfume) தயாரிக்கும் சொந்த கம்பனியை நடத்தி வரும் அசார் முன் என்பவரை காதலித்து வந்த ஷெரின் காஞ்ச்வாலாவிற்கு குடும்பத்தாரின் சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil