கப்பல் கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு..60 பேரின் கதி தெரியாததால் பதற்றம்
மடகாஸ்கர் கடற்கரை அருகே கப்பல் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்த நிலையில் 60 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாகவும் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இது சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய கப்பல் என்றும், அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.