சூயஸ் கால்வாயில் தரை தட்டிய கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியது
சூயஸ் கால்வாயில் கரை தட்டி நின்ற எவர் கிரீன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக எவர்க்ரீன் என்கிற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. உலகின் மிகவும் பரபரப்பான நீர்வழித் தடமான சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட இந்த முடக்கத்தால் சர்வதேச நீர்வழிப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிற்கு வருகின்ற கப்பல்கள் சூயஸ் கால்வாயைத் தான் பெரிதும் பயன்படுத்துகின்றன. இந்த வழித்தடம் இல்லையென்றால் பல ஆயிரம் கிலோமீட்டர் ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி தான் ஆசியா வந்தடைய முடியும்.

எவர்க்ரீன் கப்பல் முடங்கியதால் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. சர்வதேச போக்குவரத்து முடங்கிவிடும் ஆபத்து ஏற்பட்ட நிலையில் எவர்க்ரீன் கப்பல் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வந்துள்ளன. இன்று காலை சர்வதேச ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் கரை தட்டி நின்று கொண்டிருந்த கப்பல் மீண்டும் நேராக மிதக்கத் தொடங்கியது தெரிய வந்துள்ளது.
ஆனால் கப்பல் இன்னும் நகர தொடங்கவில்லை. கப்பலை இயங்கச் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது எனவும் தகவல்கள் வந்துள்ளது.
அதிகாரப்பூர்வ செய்தியின் படி சூயஸ் கால்வாய் அதிகாரிகள் கப்பல் 80% மிதக்க தொடங்கியுள்ளதாகவும் மேலும் சில இழிபறி கப்பல் கப்பல் முழுவதையும் மீட்டு கால்வாயின் மத்தியில் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.