கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கப்பல் - எங்கு தெரியுமா?
ship
changed
covid treatment place
By Anupriyamkumaresan
இந்தோனேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாறியுள்ளது.

இந்த கப்பலில் 800 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதோடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 60 சுகாதார பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்காலிக சிகிச்சை மையத்தில் நோயாளிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த கப்பல் இந்தோனேசியாவின் துறைமுக நகரமான மகாசார் பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ளது. இதில் நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.