இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து
இந்தியாவின் நாகப்பட்டினம்- இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
சுபம் பெர்ரி நிறுவனத்தால் ”சிவகங்கை” என்ற கப்பல் இயக்கப்படுகிறது, பருவநிலை மாற்றங்களால் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று தொடங்கப்பட்ட சேவை முதல் நாளிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற கப்பலில் 71 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் வந்த கப்பலில் 92 பயணிகளும் பயணித்தனர்.

செவ்வாயை தவிர்த்த வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படும், வர்த்தகம் மேம்படும், ஆன்மீக மற்றும் கலாசார சுற்றுலா மேம்படும்.
குறிப்பாக குறைந்த செலவில் இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிக்க விரும்பும் நபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே.
