பிரபல பாடகியின் அந்தரங்க வீடியோ வெளியானது - கண்ணீர் மல்க கோரிக்கை

By Petchi Avudaiappan Apr 21, 2022 12:34 AM GMT
Report

பிரபல போஜ்புரி பாடகி ஷில்பி தனது காதலனுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் அவர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் மெதுவாக பிரபலமடைந்து வரும் போஜ்புரி திரையுலகில் புகழ்பெற்ற கலைஞர்களில் பாடகி ஷில்பி ராஜூம் ஒருவர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ள அவர் தனது பாடல்களால் அடிக்கடி மக்களிடையே பேசுபொருளாக மாறுவது வழக்கம். 

இதனிடையே பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷில்பி தனது காதலனுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இணையவாசிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அழுதுக்கொண்டே அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்  தான் ஒரு சதித்திட்டத்திற்கு இரையாகிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், அந்த வீடியோவை நீக்கிவிட்டு மறுபகிர்வு செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நான் பாடகியாக முன்னேறியது எனது உழைப்பு மட்டுமல்ல. நீங்கள் என்னை முன்னே உயர்த்திக் கொண்டு வந்தீர்கள். தற்போது கொஞ்சம் பெயரும் புகழும் இருப்பதால் எனக்குப் பிரச்னைகள் வர ஆரம்பித்துள்ளதாக ஷில்பி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.