ஷில்பா ஷெட்டி கணவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Arrested RajKundra MumbaiPolice
By Irumporai Jul 27, 2021 09:34 AM GMT
Report

ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்ராவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும் அதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரைக் கடந்த மும்பை போலீஸார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ் குந்த்ராவை 27-ம் தேதிவரை போலீஸார் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார்

இந்த நிலையில் ராஜ் குந்த்ராவுக்கான போலீஸ் காவல் இன்றுடன் முடிய உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்ராவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து தீர்ப்பு வழங்கினர்.