6,600 கோடி மோசடி புகாரில் சிக்கிய ஷில்பா ஷெட்டி - அதிர்ச்சி பின்னணி??
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கின்றார்.
வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி, ஆபாசப் படங்களை எடுக்க வற்புறுத்தியதாக 4 பெண்கள் அளித்த புகாரில் மும்பை காவல்துறையால் ஜூலை 2021'இல் கைதாகி பின்னர் செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அவர் மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். 2017'இல் அஜய் - மஹேந்தர் மற்றும் அமித் பரத்வாஜ் ஆகியோரின் வேரியபிள் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக கெயின் பிட்காயின் என்ற திட்டத்தைத் துவங்கினார்.
6,600 கோடி
இதில், பல மோசடிகள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ரூ. 6,600 கோடி வரை மோசடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் விசாரணையில் தான், ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஆனால், இவ்வழக்கில் அவரை குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பிட்காயின் போன்சி திட்டம் மற்றும் அது தொடர்பான பணமோசடி நடவடிக்கைகளில் குந்த்ராவின் சாத்தியமான ஈடுபாடு குறித்து விசாரணை நடந்து வருகின்றது.