ஆபாச படம் தயாரித்ததாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் கைது!
பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவரது கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் உமேஷ் என்ற நபர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாசப் படங்கள் தொடர்பாக ராஜ் குந்த்ராவிற்கும் உமேஷ்க்கும் இடையில் பணப்பரிவர்த்தனை நடந்ததுள்ளன. இது குறித்து இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரில் தான் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். இவர்கள் உருவாக்கும் ஆபாச வீடியோக்கள் சந்தா முறையில் இயங்கும் சில செயலிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. முன்னதாக இந்த ஆபாசப் படங்கள் வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், 9 தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.