எனக்கு இந்தியா ஜெயிச்சா போதும் : டீமை விட்டு எடுத்திருந்தாலும் கெத்தாக பேசிய ஷிக்கர் தவான்

Shikhar Dhawan
By Irumporai Mar 26, 2023 01:24 PM GMT
Report

ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் இருவரும் எனக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்கள். பின்னர் என்னை தூக்கிவிட்டு சுப்மன் கில்லை ஆட வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டில் இது காலம்காலமாக நடப்பதுதான் என ஷிக்கர் தவான் கூறியுள்ளார்.

ஷிக்கர் தவான்

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணிக்கு முதன்மை துவக்க வீரராக ரோகித் சர்மா உடன் இணைந்து களமிறங்கியவர் ஷிக்கர் தவான்

கடந்த டிசம்பர் மாதம் வரை முதன்மை துவக்க வீரராக ஒருநாள் போட்டிகளுக்கு இருந்து வந்த ஷிக்கர் தவான், தனது பார்மில் சற்று சரிவை சந்தித்ததால் வெளியில் அமர்த்தப்பட்டு சுப்மன் கில் மற்றும் இசான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருவருமே இரட்டை சதமடித்து வரலாற்று படைத்துவிட்டனர்

எனக்கு இந்தியா ஜெயிச்சா போதும் : டீமை விட்டு எடுத்திருந்தாலும் கெத்தாக பேசிய ஷிக்கர் தவான் | Shikhar Dhawan Suddenly Dropped From Team India

ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ஷிக்கர் தவான் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, இந்திய அணியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டது குறித்தும், சுப்மன் கில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது குறித்தும் கருத்து தெரிவித்தார். அதன் படி ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தார்கள்.

கடினமான சூழ்நிலையிலும் அவர்கள் கொடுத்த ஆதரவு என்னால் எப்போதும் மறக்க இயலாது. நான் எனது பேட்டிங்கில் சரிவை சந்தித்துக்கொண்டிருந்தபோது, அணியின் நலனுக்காக சுப்மன் கில்லை உள்ளே எடுத்து வந்தார்கள். என்னை விட அவரது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக அணி நிர்வாகம் உணர்ந்து அவரை விளையாட வைத்திருக்கலாம்.

எனக்கு இந்தியா ஜெயிச்சா போதும் : டீமை விட்டு எடுத்திருந்தாலும் கெத்தாக பேசிய ஷிக்கர் தவான் | Shikhar Dhawan Suddenly Dropped From Team India

மற்றொரு வீரருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுப்பது கிரிக்கெட்டில் வழக்கமான நடப்பது தான். சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என கூறியுள்ளார்.