கேப்டன்ஷிப்: வெறும் கையோடுதான் போகப்போறோம் - ஷிகார் தவான் ஆதங்கம்!

Shikhar Dhawan Cricket Indian Cricket Team
By Sumathi Nov 25, 2022 06:36 AM GMT
Report

கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து ஷிகார் தவான் ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார்.

கேப்டன்ஷிப்

ஜிம்பாவே நாட்டுக்கு அடுத்தாண்டு இந்திய அணி சுற்றுபயணம் செய்யவுள்ளது. இதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது. இதற்கான ஒரு நாள் இந்திய அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கேப்டன்ஷிப்: வெறும் கையோடுதான் போகப்போறோம் - ஷிகார் தவான் ஆதங்கம்! | Shikhar Dhawan On Being Removed As Captain

ஆனால் தற்போது ஷிகார் தவான் துணை கேப்டனாகாவும் கே.எல்.ராகுல் கேப்டனாக நியிமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய ஷிகார் தவான், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டது தனக்கு வருத்தம் இல்லை என கூறியுள்ளார்.

ஷிகார் தவான்

ஜிம்பாவே அணிக்கு எதிரான கேப்டன்சி மாற்றத்தால் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. இந்த உலகத்திற்கு வெறும் கையுடன் தான் வந்தோம், வெறும் கையுடன் தான் செல்லப்போகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா 1-10 என்ற கனக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், ஒரு நாள் தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.