2023 உலகக்கோப்பையே என் இலக்கு - கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

Shikhar Dhawan Cricket
By Nandhini Oct 06, 2022 07:04 AM GMT
Report

2023 உலகக்கோப்பையே என் இலக்கு என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி பயணம்

டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இன்று மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Shikhar Dhawan

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

இந்நிலையில், 2023 உலகக்கோப்பையே எனது இலக்கு என்று தவான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், புதிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்துள்ளது. எனது அனுபவத்தை இளம் வீரர்களிடம் பகிர்ந்து கொள்வேன். 2023ல் நடக்கும் உலகக் கோப்பைக்கு முழு உடற்தகுதியுடன் வைத்துக் கொள்வது எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோகப்பை டி20 போட்டியில் தவான் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.