பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் ஷிகர் தவானை அடித்து அவமானப்படுத்திய தந்தை - ரசிகர்கள் ஷாக்; வீடியோ வைரல்!

Shikhar Dhawan Punjab Kings IPL 2022
By Swetha Subash May 27, 2022 09:57 AM GMT
Report

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வீடு திரும்பியதால், ஷிகர் தவானை அவரின் தந்தை அடித்து, உதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் ஷிகர் தவானை அடித்து அவமானப்படுத்திய தந்தை - ரசிகர்கள் ஷாக்; வீடியோ வைரல்! | Shikhar Dawan Gets Bashed By Father Video Viral

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷிகர் தவான், இதுவரை களமிறங்கிய 14 போட்டியில் மொத்தம் 460 ரன்கள் அடித்துள்ளார். எனினும் பஞ்சாப் அணி இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், ஐபிஎல் லீக் சுற்றுகள் முடிந்து வீடு திரும்பிய ஷிகர் தவானை அவரது தந்தை அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

போட்டிகள் முடிந்து வீடு திரும்பிய ஷிகர் தவானை அவரின் தந்தை திடீரென்று அடித்து, கீழே தள்ளி உதைப்பது போல் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியானது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தவான், ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாததால் தந்தையிடம் அடி வாங்கினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிறகு தான் தெரிய வந்தது அது நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட டப்ஸ்மேஷ் வீடியோ என்று. இதை பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் சிரித்து, அதனை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.