11 லிட்டர் ரத்தத்தால் ஜெயலலிதாவுக்கு சிலை செய்த ஷிஹான் ஹுசைனி
மறைந்த கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி தனது 11 லிட்டர் ரத்தத்தால் ஜெயலலிதாவுக்கு சிலை செய்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
தமிழக மாவட்டமான மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமானார்.
இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர பக்தர் ஆவார். அவருக்காக பல வினோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இவர் செய்த செயல்கள்
நடு ரோட்டில் தன்னுடைய கைகளில் 101 கார்களை ஏற்றி, அந்த கையால் தனது ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவ சிலையை வரைந்தார்.
அதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது ரத்தத்தில் இருந்து 350 மிலி ரத்தம் எடுத்தார். அதன்படி, 8 வருடங்களுக்கு எடுத்து 11.2 லிட்டர் ரத்தத்தை சேகரித்தார்.
அந்த ரத்தத்தை வைத்து ஜெயலலிதாவின் உருவ சிலையை உருவாக்கினார். இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் இருந்து ரத்தம் எடுத்தும் சிலையை உருவாக்கியதாக புகார் வந்தது.
மேலும், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அவர் வெளியில் வர வேண்டும் என்பதற்காக தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டார்.
ஜெயலலிதா மறைந்த பிறகும் அவர் மீது இருந்த நினைவால் மக்கள் முன்னேற்ற அமைப்பை தொடங்கினார்.