மாடு மேய்ப்பவர் ஊராட்சி மன்றத்தலைவரா இருக்க கூடாதா? கொதித்த திருமாவளவன்

goat thirumavalavam thiruvanamalai
By Irumporai Jun 09, 2021 05:45 PM GMT
Report

திருவண்ணாமலை மாவட்டத்தில்  பு. பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஏழுமலை. இவரை மாடுமேய்க்கிறவன் என்று பேசியும், மாடு மேய்க்கிறவனுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவியா என்று கேட்டும் அவமானம் செய்துள்ளார் ஊராட்சி செயலாளர்.

மேலும், ஏழுமலை தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என்பதற்காக அலுவலகத்தை பூட்டியும் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். தனது ட்விட்டர் பதிவில்:

 ''மாடுமேய்க்கிறவன் ஊராட்சி மன்றத்தலைவரா என்று திருவண்ணாமலை பு பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ஏழுமலை அவர்களை அவமானப்படுத்தி, தலைவர் இருக்கையில் அமரவிடாமல் தடுத்து, அலுவலகத்தையும் பூட்டிய சாதிய மனநோயாளியான ஊராட்சி செயலாளரை உடனே சிறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவதாக   கோரிக்கை வைத்துள்ளார்