செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

V. Senthil Balaji P. K. Sekar Babu
By Irumporai Jun 15, 2023 06:18 AM GMT
Report

செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மருத்துவமனையில் அமைச்சர் 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஓமந்தூரார் மருவமனை நிர்வாகம் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தகவல் அளித்துள்ளது.

செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு | Shekharbabu Denied Permission To Senthil Balaji

அனுமதி கொடுக்கவில்லை 

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜியை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால், அவரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை; அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தேன் என தெரிவித்துள்ளார்.