சேகர் ரெட்டி வருங்கால மருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பிரபல தொழில் அதிபரான சேகர் ரெட்டியின் மருமகன் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் உயிரிழப்பு
பிரபல தொழில் அதிபரான சேகர் ரெட்டி தனது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சந்திர மௌலி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.