ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு!

By Swetha Subash May 14, 2022 03:15 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீஃபா பின் ஜாயித் அல் நஹ்யான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தனது 73 வயதில் நேற்று காலமானார்.

இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு! | Sheikh Mohammed Bin Zayed Become Uae New President

இந்நிலையில், முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபாவின் மறைவை தொடர்ந்து 61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.