பப்லு பிருத்விராஜுடன் பிரிவு: எங்களுக்கு அது நடக்கவில்லை - மனம் திறந்த ஷீத்தல்!
பப்லு பிரித்விராஜுடனான பிரிவு குறித்து ஷீத்தல் விளக்கம் அளித்துள்ளார்
பிரித்விராஜ் - ஷீத்தல்
ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பப்லு பிரித்விராஜ். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அவரை பிரிந்த பிரித்விராஜ் மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.
54 வயதான பிரித்திவிராஜ் 24 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியது, பலரும் அவரை அவதூறாகவும் பேசி வந்தனர். ஆனாலும் இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோக்கள்,
யூடியூப் வீடியோக்கள் என பதிவிட்டு மகிழ்ச்சியகவே இருந்து வந்தனர். இதற்கிடையில் பிரித்விராஜ் - ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த பிரிவு குறித்து இருவரும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.
விளக்கம்
தற்போது இந்த விவகாரம் குறித்து ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் "எனது கடந்த கால வாழ்க்கையை பற்றி பலரும் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.
அவர்கள் என் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் நடந்தவற்றை தெரிந்துகொள்ளாமல் தப்பு தப்பாக புரிந்திருக்கிறார்கள். பப்லுவும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம். எங்களது உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால் இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம்.
இரண்டு பேரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. ஆனால் இது இரண்டு பேரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.