ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ - 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆடு! வைரல் புகைப்படம்
photo
australia
viral
By Jon
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லான்ஸ்ஃபீல்ட் வனப்பகுதியில் 35 கிலோ எடையுடன் பார்வை மறைக்கப்பட்ட நிலையில் கஷ்டத்துடன் சுற்றிக்கொண்டிருந்த ராட்சத செம்மறி ஆட்டை வனத்துறையினர் கண்டெடுத்து மறுவாய்வு செய்துள்ளனர். அதிகப்படியான உடல் பருமனால் தடுமாறி கொண்டிருந்த செம்மறி ஆட்டின் உடலில் இருந்து தேவையற்ற தோலை கால்நடை மருத்துவர்கள் வெட்டி எடுத்து சிகிச்சை அளித்தனர்.
ரோமம் வெட்டப்பட்டதை அடுத்து தொண்டு நிறுவனத்தின் மறுவாய்வு மையத்தில் மகிழ்ச்சியுடன் செம்மறி ஆடு சுற்றி திரிந்து வந்தது. இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு எடையை இந்த ஆடு எப்படி சுமந்து கொண்டு வாழ்ந்தது என்பதே பார்ப்பவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.