50 வயது பாட்டியுடன் ரகசிய உறவு .. ஷேன் வார்னே குறித்து வெளியான பகீர் தகவல்
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, 51வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஷேன் வார்னே
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக பெருமை பெற்றவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே இந்த நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வார்னே குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வருபவர் 51 வயதான ஜினா ஸ்டீவர்ட். .
இவர் தற்போது, ஷேன் வார்னே தன்னுடன் உறவில் இருந்து வந்ததாக பொதுவெளியில் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெருக்கமான உறவு
இதுகுறித்து பேசிய அவர், ஷேன் வார்னே கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு வந்திருந்த போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அதன்பின்னர் இரவு முழுவதும் நாங்கள் ஒன்றாக பேசி, ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டோம்.
தொடர்ந்து நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி உறவில் இருந்து வந்தோம். ஆனால் இந்த உறவு குறித்து வெளியில் யாரிடமும் கூற கூடாது என வார்னே கூறியதாக கூறியுள்ளார்.
மேலும் ,நாங்கள் ஒன்றாக இருந்த சமயத்தில் பல்வேறு ஊடகங்களும் எங்களை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் நானும் அவரும், மாறுவேடத்தில் சுற்றி வருவோம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.