காற்றிலே ஆடும் காகிதம் நான் நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்: அனுஷ்காவை புகழ்ந்த விராட் கோலி
தன்னை ஒரு மனிதனாக மாற்றிய பெருமை மனைவி அனுஷ்கா சர்மாவுக்கே சேரும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் புகழ்ந்து பேசியுள்ளார்
தினேஷ் கார்த்திக்குடன் நீண்ட உரையாடல் மேற்கொண்ட விராட் கோலி, தன்னை ஒரு மனிதனாக மாற்றியது அனுஷ்காதான் என்றும் அனுஷ்கா சர்மாவை சந்தித்தப் பிறகுதான் தன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதாக தன் மனைவியை புகழ்ந்துள்ள விராட்
அனுஷ்காவை சந்திக்கவில்லை எனில் நான் எப்படி இருந்திருப்பேன் என தெரியவில்லை மேலும் நான் எப்படி இருக்கவேண்டும் எனது செயல்கள் மூலம் நான் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவளே அனுஷ்காதான்
அனுஷ்காவை வாழ்க்கை துணையாக பெற தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அதற்காக நன்றிக்கடன் பட்டவனாகிறேன். அனுஷ்கா உண்மையில் சிறந்த வாழ்க்கைத் துணையாவார் .
இப்போது என் மகள் வாமிகா, தூங்கச் செய்து விட்டு, காலை உணவுக்கு வெளியே வருவோம். கிடைக்கும் நேரத்தில் ஒரு காஃபி அருந்துவோம். மீண்டும் ரூமுக்கு வந்து மகளுடன் நேரத்தை செலவிடுவதாக கூறினார்.
தற்போது இங்கிலாந்தில் உள்ள வீதியில் இருவரும் நடப்போம், இது எங்களுக்கு மிகவும் ரிலாக்ஸான ஒரு வாக். இந்தியாவில் அப்படி ரிலாக்சாக நாங்கள் இருவரும் வாக் செய்ய முடியாது என கூறியுள்ளார்.