‘’ லோக் சபாவும் கவர்சிக்கரமான இடம் தான்'' - வைரலாகும் சசி தரூரின் ட்வீட்

shashitharoor womanmp attractiveplace
By Irumporai Nov 29, 2021 08:22 AM GMT
Report

ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடியுள்ள நிலையில், சக பெண் எம்.பிக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மக்களவை தொகுதி உறுப்பினர் சசி தரூர்  கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பசிர்ரத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நுஸ்ரத் ஜகான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்ரியா சுலே, பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கவுர், திமுகவின் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிமி சக்கரவர்த்தி ஆகியாருடன் எடுத்த புகைப்படத்தை சசி தரூர்  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " பணி செய்திட மக்களவை கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் சொன்னது? இன்று, காலை ஆறு சக பெண் மக்களவை உறுப்பினர்களுடன் " என்று பதிவிட்டார். சசி தரூரின் இந்த ட்விட்டர் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.