சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகர் ஷர்வானந்த் - அந்த பெண் யார்ன்னு தெரியுமா? வெளியான தகவல்..!
நடிகர் ஷர்வானந்த் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமண நிச்சயதார்த்ததை மிக எளிமையாக நடத்தியுள்ளார்.
நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் முடிந்தது
‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.
38 வயதான ஷர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இதனையடுத்து, இவர்களின் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.
ஷர்வானந்த் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் ரக்ஷிதா ரெட்டியின் தந்தை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆந்திர முன்னாள் அமைச்சர் போஜ்ஜலா கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தியுமாவார். ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐதராபாத்திலிருந்து வேலை பார்த்து வருகிறார்.
முதலில், ஷர்வானந்துக்கு, ரக்ஷிதா இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் தற்போது நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர். இவர்களுடைய திருமணம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
