படப்பிடிப்பில் தீ விபத்து - 27 வயது பிரபல நடிகை கவலைக்கிடம்
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயமடைந்துள்ளார்.
ஷர்மீன் அகீ
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஷர்மீன் அகீ(27). இவர் 'சின்சியர்லி யுவர்ஸ்', 'டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்' மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது.
அப்போது அவர் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 35% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தீக்காயம்
நடிகையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் முதற்கட்ட விசாரணையில், படப்பிடிப்பு தளத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.